திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது.
முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.