தமிழ்நாட்டில் உள்ள 125 ஆறுகளின் பெயர்களையும் வைத்து, ஒரு பாடலை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனம்.
ஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து International Centre for Clean Water (ICCW) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கம் நமது பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது ஆகும். தமிழகத்தில் ஓடும் 125 ஆறுகளின் பெயர்களை பயன்படுத்தி, பாடல் எழுதி அதற்கு இசையமைத்துள்ளார் முன்னாள் ஐஐடி மாணவரான டாக்டர் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன். இந்தப் பாடலை பிரபல பாடகர்களான உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீனிவாஸ் இணைந்து பாடியிருக்கிறார்கள். அவர்களுடன் இருவரின் மகள்களான உத்தாரா உன்னிகிருஷ்ணன், சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள். A Music video celebrating the Rivers of Tamilnadu created by Kanniks Kannikeswaran for for the International Center for Clean Water, IIT Madras.