வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் பூங்குயில் சிவகுமார் - ஆசிரியை மகாலட்சுமி தம்பதியின் மகளின் இரண்டாவது பிறந்தநாளை வித்தியாசமாக, கொண்டாடியுள்ளனர். பெண் விடுதலை பேசும் பட்டிமன்றம், வாழ்வியலுக்கான சிரிப்பு யோகா, குழந்தை வளர்ப்பு குறித்த மருத்துவரின் கருத்துரை என, மழலையை வாழ்த்திட வந்தவர்களின் சிந்தைக்கு விருந்து அளித்துள்ளனர்.