பொங்கல் விடுமுறையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.41.85 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையில்,  4 நாட்களில் ரூ.41.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அதற்கு முதல் நாளான 14, போகிப்பண்டிகையிலிருந்து 18 வரை 5 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. 

வெளியூர்களில் பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.

இந்த 4 நாட்களை பொதுமக்கள் பொங்கல் வைத்தும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டும், சுற்றுலா தலங்களுக்கு சென்றும், பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்கால விடுமுறைகளில் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையான மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டது. இதனால் மதுபான விற்பனையும் அதிகமாக இருந்தது. இடையில் 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தை ஒட்டி அன்று மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

அன்றைய தினத்தை தவிர்த்து மற்ற 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.41 கோடியே 85 லட்சத்து 59 ஆயிரத்து 440-க்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.




Liquor Sales Touch ₹41.85 Crore in Tiruvannamalai District During Pongal Holidays


செய்தி: தினத்தந்தி

புதியது பழையவை