குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி: திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ / TAHDCO) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியினை பெற பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவு தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
புதியது பழையவை

About Me

WhatsApp Button