10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 93.10% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தமுள்ள 499 பள்ளிகளில் 174 பள்ளிகள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல், 348 அரசு பள்ளிகளில் 101 பள்ளிகள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
30042 பேர் தேர்வு எழுதிய நிலையில், 27969 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 95.91 % மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 90.43 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.