வந்தவாசியில் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த சகோதரிகள்!

வந்தவாசியில் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த சகோதரிகள்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC)  இந்திய வன பணித் தேர்வில் (IFS) தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து, வந்தவாசியைச் சேர்ந்த இளம்பெண் மு.வெ. நிலாபாரதி சாதித்துள்ளார். அவரது அக்கா மு.வெ. கவின்மொழி சில நாட்கள் முன் இந்திய காவல் பணியில் (IPS) தேர்வாகினார். அவர் ஏற்கெனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) குரூப் 2 தேர்வில் தேர்வாகி குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார்.

தங்கள் சாதனை குறித்து இருவரும் தெரிவிக்கும் போது, மீண்டும் ஒருமுறை தேர்வெழுதி ஐஏஎஸ் தகுதியில் கலெக்டர் ஆகவேண்டும் என்பது கனவு என்றனர். அவரது பெற்றோர் தெரிவிக்கும் போது, 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த போதும், நீட் தேர்வு அறிமுகம் ஆகியிருந்த நிலையில், தங்கள் மகள்கள் மருத்துவர் ஆக முடியவில்லை என்றனர், மேலும், யுபிஎஸ்சி தேர்வுக்காக கல்லூரியில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்து, பின்னர் பொறுப்புடன் தயாரானதால் வெற்றியடைய முடிந்தது என்றனர்.

இருவரும் வந்தவாசி மண்ணில் இருந்து ஒரே நேரத்தில் அதிகாரப் பணிக்கு செல்வது பெருமைக்குரிய தகவல். வாழ்த்துகள் சகோதரிகளே!

இரு சாதனையாளர்களின் தாயார், அ.வெண்ணிலா அரசு பள்ளி ஆசிரியையாகவும், எழுத்தாளராகவும் உள்ளார். தந்தை மு. முருகேஷ் புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் ஆவார்.




புதியது பழையவை